தர்ஷன் குடும்பத்தில் விதியின் விளையாட்டா; கருத்து சொன்ன கன்னட முன்னணி ஹீரோ

Author: Sudha
2 July 2024, 4:16 pm

கன்னட சினிமாவின் தற்போதைய பேச்சாக இருப்பது நடிகர் தர்ஷன் விவகாரம் தான்.தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வர செய்து கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தர்ஷனின் காதலி பவித்ரா கவுடா உட்பட 15 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கன்னட நடிகர்கள் பலரும் தர்ஷன் பற்றி எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தும் பகிர்ந்தும் வந்தனர்.

இது குறித்து மௌனம் காத்து வந்தார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.
இந்நிலையில் கன்னட தயாரிப்பாளர் புதிய சங்க கட்டிட திறப்பு விழாவில் பேசிய அவர் இருவர் குடும்பங்களுமே பரிதாபத்துக்கு உரியவர்கள்.சில நேரங்களில் விதியை மீறி எதுவும் செய்ய முடியாது.விதி விளையாடி விட்டது.
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை மற்றவர்களை பற்றி கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. விசாரணை நடந்து வருகிறது எனவே அனைவரும் அமைதி காத்து இருப்போம் என்றார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!