கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை தனது தந்தையின் பாடல் வரிகளை பொது மேடையில் கவிஞர் வைரமுத்து பயன்படுத்துவது பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கண்ணதாசன் குறித்து புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பேசும்போது ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசிய வீடியோ ஒன்றை பார்த்தேன் என குறிப்பிட்டு, அதில் மதுவின் கொடுமைகளை பற்றி ஒரு பாடல் ஒன்றை நீங்கள் எழுதி இருந்தீர்கள் என்றும், அதனை சிறப்பிக்கும் வகையில் சம்பந்தமே இல்லாமல் எதற்காக வைரமுத்து கண்ணதாசனை இழுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் படிக்க: ஒரேயடியா ஏறுதே.. கோடியில் புரளும் நடிகை தமன்னா.. சம்பளத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
மேலும் பேசுகையில், ஒரு சொட்டு மது கூட என் வயிற்றுக்குள் செல்லவில்லை என்று வைரமுத்து கூறியதை குறிப்பிட்டு, மதுவுக்கு எதிராக என் எஸ் கிருஷ்ணன், எம்ஜிஆர் தவிர வேறு பாடல்களில் பாடவில்லை என்றும் சொன்னதை கூறி 1973இல் பாச தீபம் படத்தில் மதுவுக்கு எதிராக கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார் என்பதை சுட்டி காட்டினார்.
மேலும் படிக்க: நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இத்தனை காலம் விலகியிருந்தது ஏன்? PERSONAL விஷயங்களை பகிர்ந்த பாவனா..!
மேலும், நீங்கள் மட்டும் தான் மதுவுக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்காதீர்கள் அது இல்லை என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன் என்றார். மேலும், பேசுகையில் இனிமேல் கண்ணதாசனை புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டாம் என உறுதியாக பேசிய அவர், வாய் நிறைய மலத்தை வைத்துக்கொண்டு புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நாற்றம்தான் அடிக்கும் என்று சாடியுள்ளார். ஏற்கனவே, கவிஞர் வைரமுத்துவிற்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் கடும் எதிர்ப்பை தெரிவித்து எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.