கன்னியாகுமரி : இரண்டு கைகளையும் இழந்து குடும்ப வறுமையை போக்க வாழ்க்கை போராட்டம் நடத்தும் இளைஞருக்கு உதவிக்கரம் நீட்ட முன் வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரி பள்ளத்தை சேர்ந்தவர் மதன் (33). மென்பொருள் பொறியாளரான இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015ம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி மதன் நாகர்கோவில் அருகே மைலாடி பகுதியில் ஒரு கட்டிடத்தின் மாடியில் வயர்லெஸ் நெட்வொர்க் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் தனது கையிலிருந்த நீளமான கம்பி அருகாமையிலுள்ள மின்கம்பிகள் உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. அன்று மதுரையில் வயது 25 இந்த விபத்தில் மதனின் தலை முதல் பாதம் வரை பல்வேறு பகுதிகள் கருகி சுயநினைவு இழந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சுயநினைவில்லாமல் மூன்று மாதம் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து ஆறு மாதம் படுக்கையில் இருந்து இருந்து வந்த இவர், தொடர்ந்து கால் முதல் தலை வரை பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி உட்பட பல அறுவை சிகிச்சைகளை ஒரே மருத்துவமனையில் மேற்கொண்டார். படிப்படியாக நினைவு திரும்பவே மதனின் இரு கைகளையும் அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இடதுகை முற்றிலும் அகற்றியதோடு வலது கையின் மணிக்கட்டு மேல் வைத்து கையை அகற்றப்பட்டது. இதனிடையே மகனின் உயிரை காப்பாற்ற போராடிய பெற்றோர்கள் பல லட்ச ரூபாய் செலவழித்து மேலும் சிகிச்சைக்கு தற்போது பல லட்ச ரூபாய் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.
மின்சாரம் தாக்கியதால் உடலில் பல பாகங்கள் சேதமடைந்து இரண்டு கைகளையும் இழந்தார். இதன் காரணமாக அவருக்கு இருந்த ஒரே வீட்டை 30 லட்சம் ரூபாய்க்கு விற்று மருத்துவச் செலவில் மேற்கொண்டார். தற்போது எந்த வசதியும் இல்லாத நிலையில் அவரது நிலையைக் கண்டு பரிதாபம் அடைந்த நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழியில் உள்ள சிவா மருத்துவமனை டாக்டர் சிவகுமார் அழுகிய அவரது நுரையீரலை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரது உயிரை காப்பாற்றினார். இயற்கை உபாதைகள் முதல் உடை மாறுவது உணவு அருந்துவது தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது என பிறர் உதவியின்றி தானாக செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். முகத்தில் மாஸ்க் அணிவது என்றால் கூட அவரது தாயார் உதவி செய்தால் மட்டுமே அவரால் அதை செய்ய முடியும்.
பெற்றோர்களின் காலத்திற்குப் பின்னர் அவரது நிலை என்னவென்று சொல்ல முடியாத அளவில் உள்ளதால் அவருக்கு கோவையிலுள்ள ஜெர்மன் நாட்டில் தயாரிக்கும் தானியங்கி செயற்கை கை பொருத்த 15 லட்ச ரூபாய் வரை தேவைப்படுவதால் டாக்டர் சிவகுமார் அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்ததோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் செக் வழங்கினார். மேலும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் மற்றும் அரசு அவருக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மதனும் தனது நிலையை கருத்தில் கொண்டு நல்ல உள்ளம் கொண்டவர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் உதவி செய்ய மதன், இந்தியன் வங்கி, நாகர்கோவில் மீனாட்சிபுரம் கிளை – 01383, A| c எண்: 6528008587 என தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.