அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கே.பி.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பு

Author: kavin kumar
16 February 2022, 4:02 pm

தருமபுரி : தருமபுரி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தலைவர் பதவி பிடிப்பதற்காக திமுக, அதிமுக மற்றும் பாமக கட்சிகளிடையே பொட்டி நிலவிவருகிறது. அதனால் அரசியல் கட்சிகளிடையே போட்டி போட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் மாவட்டம் முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்திகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி