வாளால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய புள்ளிங்கோ… வைரலாகும் வீடியோ… களத்தில் இறங்கிய போலீசார்..!!

Author: Babu Lakshmanan
5 July 2023, 11:49 am

பெரியார் பேருந்து நிலையம் அருகே வாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிக்கொண்டாடும் கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், மதுரை மாநகர் மையப் பகுதியில் உள்ள இன்மையின் நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரது மகன் தர்ஷன் தனது 19ஆவது பிறந்த நாளை நண்பர்களோடு பெரிய வாள் மற்றும் கத்திகளை கொண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து மதுரை மாநகர் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிய வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!