திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர பிரச்சாரம்…!!

Author: kavin kumar
11 February 2022, 5:30 pm

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரங்கள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் திமுக சார்பில் 24 நபர்களும்,

கூட்டணி கட்சியை 3 நபர்களுக்கும் என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 27 வேட்பாளர்களை ஆதரித்து திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி அவர்கள் இன்று திருக்கோவிலூர் நகரில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு வீடாக, வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வின் போது ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 844

    0

    0