ஜெயிக்கிறவங்க பண்றா வேலையா இது..? பிரதமர் மோடிக்கே தில்லே கிடையாது… அமைச்சர் பிடிஆர் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 12:09 pm

ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பாஜகவுடன் இணைந்த பின்னர், அவர்கள் மீதான வழக்குகளை எல்லாம் வாஷிங் மெஷின் போல பாஜக அரசு அழித்து விடுகிறது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலமாசி வீதி முதல் ஓர்க்ஷாப் சாலை வரை பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் படிக்க: கரகாட்டக்காரன் பட வாழைப்பழக் கதை மாதிரி பேசுறாரு நிதியமைச்சர் ; நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா விமர்சனம்…!!

அப்போது, அவர் பேசியதாவது :- பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும். பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வழக்குகள் எல்லாம் ஆவியாகி விட்டது. நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டது.

டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள், காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதெல்லாம் வென்று விடுவோம் என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்கிற செயலா இது? பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது.

பணம் மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள் ஒன்றிய பாஜக. நம்முடைய வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை, என பேசினார்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 308

    0

    0