CSI பிஷப் அப்பாசாமி கல்லூரியில் தேசிய சினிமா தினக் கொண்டாட்டம் : சமூக பிரச்சனைகள் குறித்த படக் கண்காட்சி..!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 7:05 pm

ஆண்டுதோறும் செப்டம்பர் 16ம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சி. எஸ். ஐ பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில், காட்சி தொடர்பியல் மாணவர்கள் நேற்று முன்தினம் முதல் இருநாட்கள் தேசிய சினிமா தினம் கொண்டாடினர்.

சினிமா மற்றும் சமூக மாற்றம் என்ற தலைப்பில் சமுதாயத்தில் சினிமா ஏற்படுத்திய தாக்கம் அதன் மூலம் நிகழ்ந்த நன்மைகள் குறிக்கும் விதமாக, சமூக பிரச்சனைகளை பேசிய படங்களை, சினிமா கண்காட்சியாக வைத்தனர்.

இதை தொடர்ந்து, வினாடி வினா, பேச்சு போட்டி மற்றும் புதையல் வேட்டை போட்டிகள் நடத்தினர். இதில், கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தெரு கூத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காட்சி தொடற்பியல் துறை கழக துவக்க விழாவில் தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஓவியர் திரு. ஜீவானந்தன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!