பள்ளி விழாவில் தேசபக்தி குறித்து தமிழில் பாடும் வடமாநில சிறுவன் : இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

Author: kavin kumar
27 January 2022, 10:18 pm

கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மத்துவராயபுரம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் தேசபக்தி குறித்து தமிழில் விவரித்து பாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டின் 73வது குடியரசு தினம் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அடுத்த மத்துவராயபுரம் அரசுப்பள்ளியில் கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவன் தேசபக்தி குறித்து தமிழில் விவரித்து பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தை சேர்ந்த அச் சிறுவனின் பெற்றோர்கள் கோயம்புத்தூரி தங்கி வேலை செய்து வரும் நிலையில் அச்சிறுவன் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவன் தமிழில் பேசி விவரித்து பாடிய அந்த பாடல்கள் தற்போது வைரல் ஆகி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…