நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரம்..!!
Author: Rajesh18 February 2022, 5:35 pm
கோவை மாநகர பகுதிகளில் வாக்குசாவடி மையங்களில் பணிபுரியும் 6190 அலுவலர்களுக்கு பயிற்சி பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, வாக்குபதிவு எந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 1290 வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 7 பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மண்டல அலுவலர்ரகள் தலைமையிலான 95 குழுவினரால், காவல்துறையனர் பாதுகாப்போடு வாக்குபதிவு மையங்களுக்கு வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல உள்ளது.
இதற்கிடையே, வாக்குபதிவு மையங்களில் பணியாற்ற 6190 பணியாளர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி கட்ட பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது. அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்குசாவடிகளில் பணிபுரியும் அலுவர்களுக்கு அதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ், கோவை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் அதிகாரியுமான ரஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.