மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு : மின்துறை ஊழியர்கள் போராட்டம்…

Author: kavin kumar
1 February 2022, 2:11 pm

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின்துறை தலைமை அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மையமாக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மின்துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மின்துறை ஊழியர்கள் தொடங்கி உள்ளனர். இதனால் மின் சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் போராட்டம் காரணமாக சோனாம்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் மின் துறை தலைமை அலுவலகம் அருகே 500 க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!