மதுபோதையில் தகராறு… பஸ் ஸ்டேண்டில் திருநங்கைக்கு அரிவாளால் வெட்டு.. கோபக்கார இளைஞன் எஸ்கேப்!!

Author: Babu Lakshmanan
26 April 2024, 12:07 pm

திருப்பூர் – பல்லடம் பேருந்து நிலையத்தில் மது போதையில் திருநங்கையை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹாரூன் பாஷா. இவர் கோவை உக்கடத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு ஹாரூன் பாஷா தனது நண்பன் காளிதாஸ் என்பவருடன் மது போதையில் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அங்கு வந்த ஹம்சா என்ற திருநங்கையும் மது போதையில் ஹாரூன் பாஷா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க: விவிபேட்-க்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி… வேட்பாளர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்த சுப்ரீம் கோர்ட்..!!!

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஹாரூன் பாஷா, தான் வைத்திருந்த கத்தியால் திருநங்கை அம்சாவின் தலையில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அம்சாவை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தப்பி ஓடிய ஹாரூன் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலை மறைவாக உள்ள காளிதாஸ் என்பவரை தேடி வருகின்றனர். மேலும், ஹாரூன் பாஷா மீது ஏற்கனவே ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 348

    0

    0