மீண்டாரா பிரசாந்த்? ஆண்டாரா அந்தகன்?.. பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்..!

Author: Vignesh
9 August 2024, 6:09 pm

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் அந்தகன். இந்தியில் மாபெரும் வெற்றி அடைந்த அந்தா தூன் படத்தில் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

இன்று படம் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இந்த படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்தை திரையில் பார்ப்பது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. கம்பேக் கம்பேக்னு சொல்லுவார்கள், ஆனால் கம்பேக் திரைப்படமாக இருக்காது. ராமராஜனின் சாமானியன், மோகனின் ஹரா போன்ற படங்கள் இப்படி சொல்லியே வீணாப்போனது.

ஆனால், பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் உண்மையிலேயே அவருக்கு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. கண்ணை மூடிக்கொண்டு பார்வையில்லாதவராக நடித்து விடலாம். இந்த படத்தில், கண்களை திறந்து கொண்டே பார்வையற்றவராக நடித்திருக்கிறார்.

இது பாராட்ட வேண்டிய விஷயம், சமுத்திரகனியை இதுவரைக்கும் நாம் வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என பல கேரக்டர்களின் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த படத்தில் மோசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி சிம்ரனின் சின்ன வீடாக வைத்து இருக்கிறார். இந்த விஷயம் யாருக்கு தெரியும் என்பதுதான் படத்தின் கதை ஓட்டம் சொல்கிறது.

இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவேன் என்று சிம்ரனை மிரட்டி பணம் சம்பாதிக்கிறார் யோகி பாபு. அதேபோல, வனிதாவிற்கு ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனது, கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் வனிதாவும் நடித்து அசத்தியுள்ளார். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

விஜய் சேதுபதி, அனிருத் பாடிய பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. பிரசாந்தின் டான்ஸ் இல்லை என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு படத்தின் கடைசியில் ஒரு பாட்டை போட்டு குஷிப்படுத்தி விட்டார் இயக்குனர். நீண்ட நாட்களுக்கு பின்னர், திரையில் வந்து ஒரு அட்டகாசமான கம்பேக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் பிரசாந்த் என்று பயில்வான் ரங்கநாதன் அந்தகன் படத்தை பற்றி பாராட்டியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி