தருமபுரி : பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொது காளை திடீர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டிஇ செங்கனூர். உள்ளிட்ட 7 கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் கிராமத்தில் ஊர் பொதுவாக சுவாமி கூலிகாளை கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தது. இந்த காளை வருடந்தோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் இந்த காளை எருது விடும் விழாவில் தனது வீரத்தைக் காட்டி வந்துள்ளது.
இதற்கு பொதுமக்கள் சார்பாக புல்இ தவிடு போன்ற உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இந்த காளை உடல் குறைவால் திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். காளை மாட்டுக்கு சடங்குகள் மற்றும் மேள தாளத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து நல்லடக்கம் செய்தனர். இதுகுறித்து அங்குள்ள இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர்.