‘இலவச பட்டா கொடுங்க’: ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்!!

Author: Rajesh
21 March 2022, 4:08 pm

கோவை: கோவையில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையினர் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:

கோவை வடக்கு வட்டத்தை சேர்ந்த வேலாண்டிபாளையம், வெங்கிட்டாபுரம், கணுவாய், தடாகம், பெரிய நாயக்கம் பாளையம் உட்பட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இலவச பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் இன்று வரை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக வாடகை வீட்டில் வசித்து வரும் மற்றும் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • Rajinikanth dedication ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!