உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கட் அவுட்? அஜித் கட் அவுட்டால் எழுந்த சர்ச்சை!

Author: Prasad
7 April 2025, 5:15 pm

சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் முதல் நாள் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலியில் அமைந்துள்ள PSS Multiplex திரையரங்கத்திற்கு வெளியே அஜித்தின் கட் அவுட் ஒன்று பாதி முடிவடைந்திருந்த நிலையில் சரிந்து விழுந்தது. இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அஜித் கட் அவுட் சரிந்து விழுந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது. 

question arises on falling of ajith cut out in tirunelveli

உரிய அனுமதி இல்லாமல் கட் அவுட்?

திருநெல்வேலி PSS Multiplex திரையரங்கத்தில் வைக்கப்பட்ட அஜித் கட் அவுட் 250 அடி என்று தகவல் வெளியாகிறது. மேலும் இவ்வளவு அடி உயர கட் அவுட் வைக்க காவல்துறையிடம் அனுமதி வாங்கப்பட்டதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 

question arises on falling of ajith cut out in tirunelveli

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது ஓரளவு நிம்மதியை அளித்திருந்தாலும் இது போன்று 250 அடி கட் அவுட் வைப்பது அவசியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது போன்ற மிக உயரமான கட் அவுட் வைக்கும்போது விபத்து நேர்ந்தால் நிச்சயம் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்
  • Leave a Reply