நடக்குற நடை புயலாச்சே… அலப்பற கெளப்பறோம் ” ஜெயிலர்” ஆடியோ லாஞ்ச் PROMO!

Author: Shree
22 July 2023, 6:05 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தற்போது படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அண்மையில் கூட இப்படத்தின் காவலா பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்ச் ப்ரோமோ வீடியோவை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வருகிற ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் சூழ திரை நட்சத்திரங்கள் ஒன்று கூடி பிரம்மிக்க வைக்க உள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோவின் லிங்க்:

  • Keerthy Suresh viral photos in baby john movie கழுத்தில் தாலி உடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!
  • Views: - 382

    0

    0