விரைவில் ரக்ஷிதாவுக்கு இரண்டாம் திருமணம்? மாப்பிள்ளை இந்த பிரபலம் தான்!

Author: Rajesh
20 January 2024, 2:37 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது. தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் ரக்ஷிதா அவரை ஏற்றுக்கொள்வதாகவே தெரியவில்லை.

பின்னர் தினேஷ் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது பிரிந்து சென்ற மனைவி ரக்ஷிதா குறித்து பல முறை பேசியிருக்கிறார். தினேஷ் எப்படியாவது ரக்ஷிதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையை தான் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். அதன் வகையில் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் ரக்ஷிதாவை சந்தித்து மீண்டும் சேருவது குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியது.

ஆனால் ரக்ஷிதா அவருடன் சேர்ந்து வாழும் எண்ணத்திலே இல்லை. இந்நிலையில் ரக்ஷிதாவுக்கு இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி உள்ளாராம். ஆம், அவர் கன்னட திரைப்பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. ரக்ஷிதா நடித்துள்ள கன்னட திரைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மறுமணம் குறித்து இதுவரை ரக்ஷிதா எந்த ஒரு பதிவையும் போடவில்லை.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 493

    0

    0