இஸ்லாமிய புனித யாத்திரை: மெக்கா செல்லும் உம்ராவிற்கான பயண சேவை மீண்டும் துவக்கம்..!!

Author: Rajesh
2 February 2022, 12:55 pm

கோவை: காந்திபுரம் தி மாடர்ன் டிராவல்சில் இந்த ஆண்டு இஸ்லாமிய புனித யாத்திரை மெக்கா செல்லும் உம்ராவிற்கான பயண சேவை துவங்கப்பட்டது.

கோவை காந்திபுரம் ஐந்தாவது வீதியில் செயல்பட்டு வரும் தி மாடர்ன் டிராவல்ஸ் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை பயண குழுவினரை அனுப்பும் சேவைகளை திறம்பட செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணத்தால்,புனித யாத்திரை தடை பட்ட நிலையில் இந்த ஆண்டு தடை நீக்க பட்டு புனித உம்ரா யாத்திரை அனுமதியை சவூதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து கோவை காந்திபுரம் மாடர்ன் டிராவல்ஸ் மீண்டும் உம்ரா பயணத்திற்கான சேவையை துவக்கியுள்ளனர். இதற்கான துவக்க நிகழ்ச்சி ஜான்சி ஒட்டல் அரங்கில் நடைபெற்றது.

மௌலவி அல் ஹாஜ் முகம்மது மன்சூர் காஷ்மி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை,டிராவல்ஸ் இயக்குனர் ஏஜாஸ் அகமது ஒருங்கிணைத்தார். ஜான்சி குழுமங்களின் தலைவர் ஷமீம் பாஷா முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,சாய்ஸ் சாதிக்,ஆகியோர் கலந்து கொண்டு முதல் உம்ரா யாத்திரை குழுவை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மௌலவி முகம்மது மன்சூர் கொரோனா பரவல் காரணத்தால், இரண்டு வருடங்களுக்கு பிறகு உம்ரா புனித யாத்திரைக்கு சவூதி அரசு அனுமதி அளித்துள்ளதால், இந்த ஆண்டிற்கான புனித யாத்திரை குழுவினர் விரைவில் மெக்கா செல்ல உள்ளதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கோட்டை செல்லப்பா,வழக்கறிஞர் உமர் ஷரீப்,ரயில்வே ஜமீல் அஹ்மத் உட்பட பலர் உடனிருந்தனர்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!