சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு நடத்த கோரிக்கை : திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் மனு

Author: kavin kumar
21 February 2022, 6:54 pm

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு, சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு நடத்தக்கோரி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநில 15 வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி கூட உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா நிறைவற்றவும், மின்துறை தனியார் மய நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்துவது, புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பிரச்சனைகள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்ற,

கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்கு மேல் நடத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத், செந்தில்குமார், அன்பால் கென்னடி உள்ளிட்டோர் சட்டமன்ற அலுவலகத்தில் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா பேசுகையில், “மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக ஒருவர் காலம் நடைபெறும் வகையில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும், மேலும் தேர்தலின்போது பிரதமர் சொன்ன பெஸ்ட் புதுச்சேரி எந்த நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்கு இதுவரை உதவிகள் வழங்கப்படவில்லை. புதுச்சேரியில் மக்களாட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு ஆட்டிப்படைக்கும், ஆட்சியாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!