தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா…? பட்டுசேலையில் பாடா படுத்தும் சாக்ஷி!
Author: Shree2 May 2023, 6:18 pm
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ட்ரடிஷனல் போட்டோவுக்கு சும்மா அள்ளுது லைக்ஸ்!

பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கிய சாக்ஷி அகர்வாலுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க முதன்முதலில் இரண்டு கன்னடப் படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்க துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக முகமறியப்பட்டார்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.அந்த படம் மூலம் நல்ல அடையாளம் கிடைத்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மதில் நல்ல இடம் பிடிக்கவேண்டும் என நினைத்து கவனுடன் நெருங்கி பழகி காதல் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதெல்லாம் வெறும் டிராமா.
அந்நிகழ்சியில் இருந்து வெளியேறியதும் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துவங்கினார். இதனிடையே இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். அந்தவகையில் தற்போது துளி கூட கிளாமர் காட்டாமல் கட்டழகு தங்க மேனியை ட்ரடிஷனல் லுக்கில் காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் வர்ணனையில் மூழ்கியுள்ளார்.