நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல்: கோவையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல்…
Author: kavin kumar27 January 2022, 11:16 pm
கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தெற்குத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
நாளை வேட்புமனு தாக்கலை ஒட்டி இன்று மாலை 6 மணி அளவில் இருந்து கோவையின் 10-சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களும் சீல் வைக்கபட்டது. தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 22-ந்தேதி நடைபெறும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை முழுக்க உள்ள பத்து சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. நாளை வேட்பு மனு தாக்கலை ஒட்டி இன்று மாலை 6 மணி அளவில் இருந்து கோவையின் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களும் சீல் வைக்கபட்டது. மேலும், கட்சியின் பெயர் சட்டமன்ற உறுபினர்களின் புகைபடங்கள் அடங்கிய பலகைகளை அதிகாரிகள் துணியால் முடி வைத்துள்ளனர்.அனைத்து சட்டமன்ற உறுபினர்களின் அலுவலகமும் இன்று இரவு முதல் தேர்தல் நடந்து முடியும் வரை திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.