எங்க பாத்தாலும் லஞ்சம், ஊழல்… 10 ஆண்டுகளில் சேர்க்க வேண்டியதை ஒரே ஆண்டில் சேர்த்து விட்டது திமுக… சீமான் கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
14 May 2022, 6:24 pm

10 ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை லஞ்சம், ஊழல் மூலம் ஒரே ஆண்டில் திமுக சேர்த்து விட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இளையன்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி, ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது. அங்குள்ள ஈழத்தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்யட்டும். ஆனால் ராஜபக்சே ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கியூ பிராஞ்சையும், சிறப்பு முகாமையும் கலைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்ய முடியாது.

10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என திமுக கூறுகிறது. ஆம்… அது உண்மைதான். 10 ஆண்டுகளில் ஊழல், லஞ்சமாக பெற்று சேர்க்க வேண்டியதை ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டனர். இன்னும் 50 ஆண்டில் சேர்க்க வேண்டியதை அடுத்த நான்கே ஆண்டில் சேர்த்துவிடுவார்கள்.

இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலை. மும்மொழி கொள்கை என்பது மோசடி வேலை. பா.ஜ.க. அரசு தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை பேசுகிறது. தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைகளாக தெரிவிக்கின்றனர், எனக் கூறினார்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!