பதுக்கி வைத்திருந்த 118 பிளாஸ்டிக் சேர்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
Author: kavin kumar12 February 2022, 5:01 pm
திருவள்ளூர் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மீஞ்சூர் பேரூராட்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 118 பிளாஸ்டிக் சேர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி காவேரி நகர் பகுதியில் மேரி என்பவரது வீட்டில் 118 பிளாஸ்டிக் நாற்காலிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகதேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தனர் .
உரிய ஆவணம் இல்லாமல் பிளாஸ்டிக் சேர்கள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து அதனை மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.