எல்லாமே இனிமேல் நல்லாத்தான் நடக்கும்… ரூ.100 கோடியில் சிம்புவின் அடுத்த படம்… ஹீரோயின் இந்த ஸ்டார் நடிகை தான்!
Author: Shree14 May 2023, 9:02 am
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.
குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து சிறுவயதிலே சிம்பு புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பத்து தல இப்படம் பெரிதாக ஓடவில்லை. வெற்றிமாறனின் விடுதலை இப்படத்தை தூக்கி சாப்பிட்டுவிட்டது.
அதையடுத்து தற்போது கமல் ஹாசனின் தயாரிப்பில் தனது 48வது படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது உறுதியாகிவிட்டால் தீபிகா படுகோன் சிம்புவுடன் நடிக்கும் முதல் படம் இது தான். இவர் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.