சிங்காரவேலர் பிறந்த நாள் : சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை…

Author: kavin kumar
18 February 2022, 4:46 pm

புதுச்சேரி : சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் செல்லும் சாலைய உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு மீனவ அமைப்பினரும் சிங்காரவேலரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?