இணையும் தெலுங்கு கன்னட சூப்பர் ஸ்டார்கள்; ரஜினி காந்த் காம்போ;வந்தது அறிவிப்பு

Author: Sudha
13 July 2024, 1:34 pm

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி ஹீரோ ராம் சரண் நடிக்கும் கேம்சேஞ்சர் படம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.

ரஜினியின் ‘ஜெயிலர், தனுஷின் ‘கேப்டன் மில்லர் படங்களின் மூலம் சிவராஜ்குமார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அடுத்து அவர் தெலுங்கில் நடிகராக அறிமுகமாகிறார். சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை படக்குழு அறிவித்துள்ளது.

இந்த செய்தி ராம்சரண் மற்றும் சிவராஜ் குமார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கு மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்

ராம் சரண் கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறர். இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?