புனித வெள்ளி அனுசரிப்பு: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!!

Author: Rajesh
15 April 2022, 1:42 pm

கோவை: புனித வெள்ளி தினத்தையொட்டி கோவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் துக்க நாளாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

புனித வெள்ளி இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் காலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் கிறிஸ்து நாதர் ஆலயத்தில், ஆயர் தலைவர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில். ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி