முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியல்…

Author: kavin kumar
11 February 2022, 4:43 pm

திருப்பூர் : காங்கேயத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி இலங்கை அகதிகள் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் – கரூர் சாலையில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள முகாமில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும்,

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த இலங்கை அகதிகள் 100க்கும் மேற்பட்டோர் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது. மறியல் போராட்டத்தின் போது மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி