ரோஜா 1970 ல் சூரிய காந்தியா; இயக்குனர் மணிரத்னம் படமா அது? அடேங்கப்பா தகவல்

Author: Sudha
4 July 2024, 7:01 pm

ரோஜா 1992 இல் வெளிவந்த தமிழ் காதல் திரில்லர் திரைப்படம்.மணிரத்னம் எழுதி இயக்கினார். இப்படத்தில் அரவிந்த் ஸ்வாமி மற்றும் மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒரு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தனது கணவரை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு எளிய பெண் எப்படி மீட்கிறாள் என்பதே கதை.

இதே போன்றதொரு திரைப்படம் இத்தாலி மொழியில் 1970 களில் திரைப்படமாக வந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?

1970 இல் இத்தாலி மொழியில் ஐ கிராசோலி என்னும் தலைப்பில் வெளிவந்த திரைப்படம். இதற்கு பொருள் சூரியகாந்தி. சூரியனை தேடி பூக்கும் சூரியகாந்தி போல காதலனை தேடிச் செல்லும் காதலியை பற்றிய கதை.சோபியா லோரன் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட வரி உண்டு

“காதலுக்காக பிறந்த பெண் அவளை காதலிக்கவே பிறந்த ஆண்”

இரண்டாம் உலகப்போரில் தன் கணவனை போரில் தொலைக்கும் ஒரு மனைவி எவ்வாறு அவனை தேடி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.

சூரியகாந்தி நம்மிடம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜாவாக வந்தது. 90 களின் ஹிட் படங்கள் வரிசையில் எப்போதும் ரோஜாவுக்கு தனி இடம் உண்டு.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி