காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது: ஈஷா அறக்கட்டளையின் விவசாயி பேட்டி!!

Author: Rajesh
29 January 2022, 5:15 pm

கோவை: காவேரி கூக்குரலின் வெற்றியாக தமிழக அரசும் மரங்களை நடவு செய்ய முன்வந்துள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரலின் விவசாயி தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் அமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் அமைப்பின் விவசாயிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி தமிழ்மாறன், கடந்த 10 ஆண்டுகளாக ஈஷா உடன் பயணித்து வருவதாக தெரிவித்தார். சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பசுமை கரங்கள் திட்டத்தை 2004ல் துவங்கி தமிழகம் முழுவதும் மரங்களை நடும் திட்டத்தை துவக்கி வைத்து உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் நீர் மேம்பாட்டிற்காக ரேலி ஃபார் ரிவர் என்ற திட்டத்தை துவக்கி ஆறுகளை இணைக்கும் செயல்பாட்டினை செயல்படுத்தி வருவதாக கூறினார். மத்திய அரசும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 6 மாநிலங்கள் மரம் சார்ந்த விவசாயத்தை செய்து வருவதாக தெரிவித்தார். தற்போது தமிழகத்தின் முக்கிய ஆறாக விளங்கும் காவேரி ஆற்றை மீட்டெடுக்கும் விதமாக காவேரி கூக்குரல் என்ற திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது துவங்கிய சிறிது காலத்திலேயே ஊரடங்கு போடப்பட்டது. இருப்பினும் இதில் உள்ள உறுப்பினர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து மரங்களை வளர்த்து வந்தனர். தற்போது காவேரி கூக்குரல் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 2 கோடிக்கும் மேலான மரங்களை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதன் மூலம் பல விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர். மேலும் காவேரி கூக்குரல் மூலம் விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயம் குறுத்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் வெற்றியாக தமிழக அரசும் 263 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண்ணின் தரம் அதில் விளைய கூடிய பொருட்களின் தரம் உயர்வதாகவும் தெரிவித்தார். இனி வரும் காலங்களிலும் இதனை விரிவு படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 2588

    0

    0