கோவை : கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டி பாஜகவினர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
கோவை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர், அலுவலகத்திற்குள் மோடியின் படத்தை மாட்டினர். இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு எனவும், மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினர். இதனால் பாஜகவினருக்கு அலுவலக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும், மோடியின் புகைப்படத்தை கழற்றினால் அதற்கு திமுக தான் காரணம் எனவும், புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பாஜகவினர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.