இறக்குமதியாளராக இருந்த இந்தியா ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.. பாதுகாப்பை வரலாறு காணாத உயரத்திற்கு கொண்டு செல்வதே இலக்கு : பிரதமர்!!
Author: Udayachandran RadhaKrishnan18 July 2022, 8:59 pm
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிகவும் வலுவாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. இரண்டாம் உலகப் போரின்போது நாம் பாதுகாப்பு துறையில் ஒரு இறக்குமதியாளராக இருந்தோம்.
போதைக்கு அடிமையானவர்கள் போன்று நாம் சாதாரண பாதுகாப்பு பொருட்களுக்கு கூட வெளிநாட்டை சார்ந்து இருக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டோம்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடிமையாகி கிடந்தோம். ஆனால் இன்று கடந்த 4-5 ஆண்டுகளில் குறுகிய காலத்தில், நமது பாதுகாப்பு இறக்குமதி சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது.
இதன் மூலம் நாம் முன்னர் பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்து தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் கடற்படைக்கு 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது முதல் படியாகும்.
நாம் நமது தயாரிப்புகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால், உலகம் நம்மிடம் முதலீடு செய்யும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? நமது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் மீது நாம் நம்பிக்கை ஊட்டியபோது, உலகமே முன் வந்தது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் கடற்படைக்கு 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது முதல் படியாகும். 100 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பை வரலாறு காணாத உயரத்திற்கு கொண்டு செல்வதே இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கப்பற்டை தலைமை தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.