திருச்சி ; திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சோதனையில் 47 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் கைமாற போவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் நேற்று மாலை திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேசன் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.
அப்போது, அலுவலகம் உள்ளே இருந்த ஊழியர்கள் கணக்கில் வராத ரூபாய் 47, ஆயிரம் பணத்தை ஜன்னல் வழியாக தூக்கி எரிந்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் உடனடியாக அந்த பணத்தை கைப்பற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் துவரங்குறிச்சி பொறுப்பு பதிவாளர் இந்துகுமார் உட்பட சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.