கர்ப்பமா இருக்கீங்களா… நார்மல் டெலிவரியாக இந்த டிப்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!!!
Author: Hemalatha Ramkumar7 January 2025, 2:51 pm
ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தையை சுமக்கும் 9 மாதங்களும் கிட்டத்தட்ட ஒரு பெரிய ராட்டினத்தில் பயணிப்பது போல தான் இருக்கும். ஒரு சிலருக்கு இயற்கையான முறையில் குழந்தையை பிரசவிக்க வேண்டுமா அல்லது சிசேரியன் செய்து கொள்ளலாமா என்ற யோசனை வரலாம். பெரும்பாலானவர்கள் இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தில் குழந்தையை பிரசவிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் இதற்கு ஆசைப்படும் பொழுது அதற்கான சில திட்டங்களையும் வகுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் சுகப்பிரசவத்திற்கு உதவக்கூடிய சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது ஒவ்வொரு மாதமும் மகப்பேறு நிபுணரிடம் சென்று சோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன் மற்றும் மருந்துகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வது ஏதேனும் சவால்கள் அல்லது காம்ப்ளிகேஷன் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு உதவும்.
கர்ப்ப காலத்தின் போது சாப்பிடும் உணவு குழந்தையின் வளர்ச்சியை மட்டுமல்லாமல் பிரசவத்தின் போது எந்த ஒரு சிக்கலும் ஏற்படாமல் ஒரு பெண்ணின் உடலை குழந்தை பிறப்புக்கு தயார் செய்கிறது. எனவே சரியான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.
7 மாதங்களை நெருங்கி விட்டாலே மருத்துவர்களிடமிருந்து ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு செயல்முறை எப்படி இருக்கும் என்பதை உங்கள் கணவரோடு சேர்ந்து தெரிந்து கொள்வது அவசியம். இயற்கையான முறையில் குழந்தையை பிரசவிப்பதற்கும் சிசேரியன் முறையில் குழந்தையை பிரசவிப்பதற்கும் இருக்கக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளை அவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் உடல் மாற்றத்தை சமாளிக்கவும், இயற்கையான முறையில் குழந்தையை பிரசவிப்பதற்கு உடலை தயார்படுத்தவும் இருக்கக்கூடிய சில உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யலாம். ஆனால் எந்த ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
இதையும் படிக்கலாமே: குளிர் காலத்தில் தலைமுடிக்கு எண்ணெய் மசாஜ் பண்றதுல இவ்ளோ பவர் இருக்கா…???
ஒரு கர்ப்பிணி பெண் குழந்தையை பிரசவிக்கும் சமயத்தில் அவருடைய கணவர் அல்லது அம்மா உடன் இருப்பது அப்பெண்ணின் மன தைரியத்தை அதிகப்படுத்தும். இந்த மாதிரியான நுட்பங்கள் பிரசவ வலியின் தீவிரத்தை 50% குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இது சுகப்பிரசவத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தையும் அதிகமாக்கும்.
பிரசவத்தின் போது செய்யப்படும் பெல்விக் பரிசோதனைகள், செயற்கையான முறையில் மெம்பரேன்களை உதிர செய்தல், சுகப்பிரசவத்தின் பல்வேறு படிகள் போன்ற கர்ப்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கணவன் மற்றும் மனைவி தெரிந்து வைத்துக் கொள்வது அவர்கள் சரியான முடிவை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.