திருவண்ணாமலை மலை உச்சியில் 2-வது நாளாக சுடர் விட்டு எரியும் மகா தீபம் ; இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…!!

Author: Babu Lakshmanan
27 November 2023, 10:10 pm

அண்ணாமலையார் கோவிலில் இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை ஆறு மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பௌர்ணமி நேற்று மாலை 3:58 மணிக்கு தொடங்கி இன்று பிற்பகல் 3:07 மணி வரை உள்ளதால் காவல்துறை சார்பில் மகா தீபத்தன்று நேற்று போடப்பட்டிருந்த அதே 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் 14 ஆயிரம் போலீசார் இன்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களை கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு ராஜகோபுரம் வழியாக காவல் துறையினர் உள்ளே தரிசனத்திற்கு ஏற்றவாறு வரிசைப்படுத்தி எந்த சிரமம் இன்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

  • Game Changer Vs Good Bad Ugly VS Vanangaan Pongal 2025 Race பொங்கல் ரேஸ்: கேம் சேஞ்சருக்கு புதிய சவால்!
  • Views: - 309

    0

    0