‘உங்கள் புகழ் இம்மண்ணில் என்றென்றும் நிலைத்து நிற்கும்’ … கேப்டன் நினைவிடத்தில் பாஜக மாநில செயலாளர் அஞ்சலி..!!

Author: Babu Lakshmanan
30 January 2024, 9:19 am

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு கண்ணீர் சிந்தாத மக்களும், தலைவர்களும் நிச்சயம் இல்லாமல் இல்லை. விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தினமும் நூற்றுக்கணக்கான மக்களும், பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இதுவே கேப்டன் விஜயகாந்த் மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கான சான்றாகும். அவரது நினைவிடத்தில் அவர் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் ஒலிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, அவர் கடைபிடித்து வந்த அன்னதானம் திட்டம், கேப்டனின் மறைவுக்கு பிறகும், அவரது நினைவிடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இருந்தாலும், இல்லாவிட்டாலும் பேர் சொல்லும் பிள்ளை என்று வரிகளுக்கு பொருத்தமான தலைவரான விஜயகாந்த்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இது பொதுமக்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வமும் நேற்று நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அங்கு அஞ்சலி செலுத்த வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி மற்றும் நடிகர் ரஞ்சித் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறித்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் X தளத்தில் பதிவிட்டிருப்பதாவது :- பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி தேமுதிக பொதுச்செயலாளர் அக்கா பிரேமலதா விஜயகாந்த் அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிய உங்கள் புகழ் இம்மண்ணில் என்றென்றும் நிலைத்து நிற்கும் கேப்டன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 240

    0

    0