திருவிழாவுக்காக பட்டாசு எடுத்து சென்ற போது நேர்ந்த சோகம் : எதிர்பாரா விதமாக பட்டாசுகள் வெடித்து விபத்து…!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2023, 5:46 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புது வடவள்ளி கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத் திருவிழா நாளை பூச்சாற்றுடன் தொடங்க உள்ள நிலையில் இன்று தீர்த்த குடம் எடுப்பதற்காக டாட்டா ஏஸ் வேனில் புது வடவள்ளி கிராமத்திலிருந்து கெஞ்சனூர் கிராமத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு பக்தர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில் தீர்த்த குடம் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு திரும்பி செல்லும்பொழுது வானவேடிக்கைக்காக பயன்படுத்தப்படும் பட்டாசுகள் கொண்டு வந்த வாகனத்தில் திடீரென எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்துள்ளது. இதில் வாகனத்தில் வந்த எட்டு இளைஞர்கள் காலில் தீக்காயம் பட்டு விபத்துக்குள்ளாகினர்.

இதனையடுத்து தீக்காயம் ஏற்பட்ட 8 இளைஞர்களை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 468

    0

    0