வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்தி உள்ளிட்டோர் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதற்கு முன்னதாக வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் மாநகர் திமுக அலுவலகத்தில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ச்சியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை மாலை அணிவித்துவிட்டு, சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதற்கு முன்னதாக இண்டியா கூட்டணி தொண்டர்கள் ஆராவாரத்துடன் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழிநெடுக்கும் பட்டாசுகள் வெடித்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு மேல தளங்கள் இசைத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பொதுமக்களிடம் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார் கதிர் ஆனந்த்.
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
This website uses cookies.