எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை.. பெண்களுக்கு வாழ்த்து அட்டை கொடுத்து மகளிர் தின வாழ்த்து சொன்ன பாஜக நிர்வாகி!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 4:53 pm

பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வமும், தனது பங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துடன், ஒருபடி மேலே சென்று, தனது துறைமுகம் தொகுதியில் உள்ள பெண்கள், தாய்மார்களுக்கு மகளிர் தின வாழ்த்து அட்டையை வழங்கி வருகிறார்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது :- பெண் சக்தி இந்திய தேசத்தின் கனவுகளை நிறைவேற்றும்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி திட்டங்களில் ஒன்றான ‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் நம் தமிழக பெண்கள் 2022-23ம் நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.43,731 கோடி கடன் பெற்று முன்னேறியுள்ளனர் என்கிற செய்தி பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

“எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை” என்ற மகாகவி கண்ட புரட்சி பெண்களாய் பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நம் அன்பு தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன், பெண்களுக்கு அதிகாரம் அளிப்போம், பாலின சமத்துவம் போற்றுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை தனது X தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள வினோஜ் பி செல்வம், “எங்கள் மத்திய சென்னை தொகுதியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அனைவரின் கரங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள் சென்று சேர வேண்டுமென விரும்பினேன். அதன் வெளிப்பாடாக இன்று முதலே அனைவரின் கரங்களிலும் எனது வாழ்த்துச் செய்தி சென்றுகொண்டு இருக்கிறது.

“எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை” என்ற மகாகவி கண்ட புரட்சி பெண்களே… இன்று மட்டுமல்ல; என்றுமே என் வாழ்த்து உங்களுடன் இருக்கும்..!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?