வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த விசிக : போராட்டத்தில் இறங்கிய வேட்பாளர்கள்

Author: kavin kumar
19 February 2022, 7:19 pm

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக சுயேச்சை, அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சி 28வது வார்டு திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நடராஜன் போட்டியிடுகின்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் வேட்பாளர் நாகராஜ், சுயேட்சை வேட்பாளர் காளிராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். விடுதலை சிறுத்தை அமைப்பினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாகவும், முறைகேடாக வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டு பதிவு செய்வதாகவும் பிரச்சனை எழுந்தது.

இதனால் வாக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சுயேச்சை வேட்பாளர் காளிராஜ் அதிமுக வேட்பாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஓட்டுச் சாவடிக்குள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் 10 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் மறியல் போராட்டம் நடந்தது. இவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட வேட்பாளர்கள் கூறுகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 28வது வார்டு திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர். ஆட்களை முறைகேடாக அழைத்து வருகின்றனர். வெளியாட்கள் அராஜகம் செய்கின்றனர். இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். முறையான ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி