திருவள்ளூரில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி..5 பேர் படுகாயம்..!!
Author: Rajesh29 March 2022, 11:04 am
திருவள்ளூர்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி பகுதியில் கை கால்களை இழந்த சின்னப்பரெட்டி என்ற முதியவரை நலம் விசாரித்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
சீத்தஞ்சேரி காட்டு சாலையில் கலையரசன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி சென்ற மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த லாரி மோதியதில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரது மனைவி ஜோதி (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஆட்டோவில் வந்த சாரதாம்பாள், பொம்மி, வைஜெயந்திமாலா,உஷாராணி, சரஸ்வதி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஜோதியின் உடலை மீட்டு பென்னாலூர் பேட்டை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கை கால் இழந்த முதியவரை பார்த்து விட்டு வீடு திரும்பிய போது நடைபெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,