நடுரோட்டில் எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா? தற்கொலையா?..போலீசார் விசாரணை!!

Author: Rajesh
19 April 2022, 11:42 am

திண்டுக்கல்: மருத்துவக்கல்லூரி சாலை ஒன்றில் எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் தீ வைத்து எரித்து கொன்றார்களா. என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாலை சந்திப்பில் உள்ளது ஜோசப் காலனி. இந்த சாலையில் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் முற்றிலும் எரிந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த போலீசார் அப்பெண் குறித்து விசாரணை நடத்தினர் . உடலின் முகம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதி எரிந்த நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இறந்த பெண்ணின் அருகே பெட்ரோல் கேன் ஒன்று கிடந்தது.

அதனை கைப்பற்றிய போலீசார், உடலை உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

அந்தப் பெண் பெட்ரோல் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா?. யாரேனும் எரித்துக் கொலை செய்துள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…