காலபைரவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழிபாடு…

Author: kavin kumar
26 January 2022, 3:32 pm

தருமபுரி : அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் வழிபாடு செய்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்ட அதிமுக முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அவரது உறவினர்கள், மற்றும் அவருக்கு ஆதரவாளர்கள் என தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சென்னை மற்றும் தெழுங்கான உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையில் சோதனை செய்தனர். அப்போது தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து இன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு அதிமுக முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.

அதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் புகழ் பெற்ற காசிக்கு அடுத்தபடியாக உள்ள காலபைரவருக்கு என தனி கோவில் அமைந்துள்ள அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் கோவிலில் அதிமுக முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் இன்று காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதியமான் கோட்டை பகுதிக்கு வந்து இருந்தார். காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அப்பகுதியில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் தன் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?