பாம்பின் நாக்கை பிடித்து மரண பீதி கிளப்பிய குழந்தை – வியப்பூட்டும் வீடியோ!
Author: Rajesh8 December 2023, 4:40 pm
சமூகவலைத்தளங்கள் உருவெடுத்ததில் இருந்து மக்கள் எதையெல்லாம் வீடியோ எடுப்பது என்ற விவஸ்தை இல்லாமல் இஷ்டத்துக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்களை விளையாட்டாக நினைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு பார்ப்போரை பதற வைக்கிறார்கள்.
குறிப்பாக தங்கள் குழந்தை செய்யும் சேட்டைகளை படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆபத்தான செயல்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.
அப்படித்தான் தற்போது ஒரு கைக்குழந்தை அசால்டாக பாம்பை தூக்கிட்டு போட்டும் பாம்பின் முக்கத்தை பிடித்து அம்முக்கி பயமின்றி விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்ததும் பதறிப்போன நெட்டிசன்ஸ் பலரும் அந்த குழந்தையின் பெற்றோர்களை தூக்கி ஜெயிலில் போடவேண்டும் என திட்டி தீர்த்துள்ளனர்.