இந்து சிறுபான்மையினர் எதிர்ப்பு தொடர்கிறதா? மோடி கொடுத்த தங்க கிரீடம் திருட்டு..

Author: Hariharasudhan
11 October 2024, 11:57 am

வங்கதேசத்தில் உள்ள புகழ்பெற்ற காளி கோயிலில் இருந்த தங்க கிரீடம் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கதேசம்: வங்கதேசத்தின் சாத்கிராவில் உள்ள ஷ்யாம் நகரில் புகழ் பெற்ற ஜெஸ்ஹோரேஷ்வரி கோயில் உள்ளது. இங்கு முதன்மைக் கடவுளாக காளி அருள் பாலித்து வருகிறார். இந்தக் கோயிலில் காளியின் தலையில் இருந்த கிரீடம் காணாமல் போயுள்ளது. நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்த பூசாரி திலீப் முகர்ஜி, கோயிலில் இருந்து புறப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, அங்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற நபர்,அம்மன் தலையில் இருந்த கிரீடம் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அவர்கள் கோயிலுக்கு வந்து பார்த்த பிறகு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கோயிலுக்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்டுள்ள இந்த கிரீடம், கடந்த 2021ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்திற்குச் சென்றபோது பரிசாக கொடுத்த பொருளாகும். இந்த நிலையில், இந்த கிரீடம் காணாமல் போனது இரு நாட்டு உறவில் சற்று திளைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் ஆட்சி.. அதிபராக பதவியேற்றார் அனுர குமார திசாநாயக்க..!!

வங்கதேசத்தில் நிலவிய கிளர்ச்சி போராட்டத்தால் அதன் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். மேலும், இந்த போராட்டத்தின் போது, வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஒரு இந்துக் கோயிலில், பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட கிரீடமே காணாமல் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…