கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் ஓவனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹாலிபாக்ஸ்: கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் பிரபல வால்மார்ட் ஸ்டோர் இயங்கி வருகிறது. இங்கு கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில், ஒரு இளம்பெண் அங்கு இருக்கும் நடமாடும் ஓவனில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த கனடா போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, அங்கு பணிபுரிந்து வருவோரிடம் விசாரித்தனர்.
அப்போது, அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது, அவரது பெயர் குர்சிம்ரன் கவுர் என்றும் தெரிய வந்தது. மேலும், அதே கடையில் அவரது தாயாரும் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது. எனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ நாளன்று, குர்சிம்ரனை வெகு நேரமாக காணவில்லை எனக் கூறி அவரது தாயார் தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஓவனிலிருந்து ஏதோ ஒன்று லீக் ஆவதை அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது, அதில் குர்சிம்ரனின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மேலும், குர்சிம்ரனின் தந்தை மற்றும் சகோதரர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லூதியானைவைச் சேர்ந்த குர்சிம்ரன் குடும்பத்தினர், 2021ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்றுள்ளனர். தனது கனவு வீட்டை கட்டமைத்து, அதில் வாழ வேண்டும் என்ற கனவோடு தாய் – மகள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க : நான் வரேன்.. அடுத்த திட்டத்தில் அதிமுக.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!
சீக்கிய மதத்தைச் சேர்ந்த குர்சிம்ரன், மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பு மூலம் நிதியுதவி பெற்று படிப்பையும் தொடர்ந்து வந்து உள்ளார். இந்த நிலையில், அவ்வமைப்பு சார்பில் குர்சிம்ரன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பு வெளியிட்ட பதிவில், “இது மிகவும் கவலை அளிக்கும் மற்றும் சோகமான செய்தி. நாங்கள் அனைத்து தார்மீக மற்றும் நிதி ஆதரவை வழங்க முயற்சிக்கிறோம். நிதி உதவிக்கு கூடுதலாக, குர்சிம்ரனின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆதரவையும் வழங்குகிறது. இந்த துயரமான தருணம், அவர்களின் வாழ்க்கையில் எடுத்த உணர்ச்சிகரமான எண்ணிக்கையை அங்கீகரிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.