ஈரான் ராணுவத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தனது போரைத் தொடங்கி அரங்கேற்றி வருகிறது. முன்னதாக, எல்லைப் பகுதியான காசா பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. இந்த நிலையில், இதற்கு எதிராக இந்தப் போர் நடவடிக்கை நடந்து வருகிறது. சுமார் ஓராண்டுக்கு மேலாக இந்தப் போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இவர்களும் ஈரானின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு ஆகும். இவ்வாறு ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டு, பலர் படுகாயங்களுடன் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். பல குழந்தைகள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், இதற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த ஆவேசமான தாக்குதல்களால் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் படை தளபதிகள், தலைவர்களை இஸ்ரேல் கொன்று வருகிறது. இதனால் ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் தலைவர்கள் இன்றி தற்காலிக தலைவர்கள் தலைமையில் இஸ்ரேலுடன் போராடி வருகிறது. இது ஈரானை ஆத்திரமடையச் செய்துள்ளதால், உலக நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளன. எனவே, ஈரான் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இதன்படி, சுமார் 185 ஏவுகணைகளை ஈரான் தனது நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. ஆனால், இஸ்ரேல் தனது வான்வெளி பாதுகாப்பு அமைப்பான அயன்டோம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியது. ஆனால், இந்த தாக்குதலால் இஸ்ரேல் மீண்டும் கொந்தளித்துள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.
ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் ஹராஜ் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இன்று (அக்.26) அதிகாலை முதல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, இஸ்ரேல் – ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படை அதிகாரி எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு, தாக்குதல் தொடங்கி உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.
அதில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், தற்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் அதன் பினாமிகளும், ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில், அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும், கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக திரட்டப்பட்டு உள்ளன. இஸ்ரேல் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கத் தேவையான எல்லாவற்றையும் செய்வோம்” எனத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : பிரசவத்திற்காக வந்த கணவர்.. சடலமாக மீட்கப்பட்ட சிறுமி.. சிவகங்கையில் திடுக்கிடும் சம்பவம்!
இந்த நிலையில், அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன், “ஈரானில் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகளைக் குறி வைக்க வேண்டாம். மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தக்கூடாது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில், அமெரிக்காவின் ஆலோசனையோ ஒத்துழைப்போ நேரடியாக இல்லை” எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு…
கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை…
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…
This website uses cookies.