டிரம்ப் வெற்றி இந்தியாவுக்கான சாதக, பாதகங்கள் என்ன?

Author: Hariharasudhan
7 November 2024, 11:20 am

ட்ரம்ப் வெற்றியால் அமெரிக்காவில் கிரீன் கார்டு, விசா உள்ளிட்டவற்றில் இந்தியர்கள் சிக்கலைச் சந்திக்கக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

வாஷிங்டன் டிசி: அமெரிக்காவின் 47வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய முன்தினம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதன்படி, அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், பெரும்பான்மைக்குத் தேவையான 270 எலெக்டோரல் வாக்குகளை விட அதிகமாகப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், மோடி உடனான உறவு என்பது ட்ரம்பிற்கு மிகவும் இணக்கமானதாக இருந்தாலும், கல்வி, வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு ஆகியவற்றில் இந்தியர்கள் சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, விசா, கிரீன் கார்டு போன்றவற்றில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

TRUMP WALK WITH MODI

அதேநேரம், பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்டவற்றில் பலத்த சக்தி கொண்டு இந்தியா பக்கமே ட்ரம்ப் நிற்கிறார் என்றுதான் கூற வேண்டும். அதேநேரம், சர்வதேச அளவில் போர் ஏற்படாத சூழலை ட்ரம்ப் கச்சிதமாக மேற்கொள்வார் என்றும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மீண்டு(ம்) வந்த ட்ரம்ப்.. பங்குச்சந்தை முதல் பாய்ச்சல் வரை!

மேலும், அமெரிக்க டாலர் மதிப்பில் நிலைகொண்டு இருப்பதால், இந்தியப் பொருளாதாரம் சவாலாக அமையும். அதேபோல், எல்லைக் கோட்பாடுகளில், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நின்று, இந்தியாவின் வலிமைக்கு பக்கபலமாக ட்ரம்ப் இருப்பார் என்ற நம்பிக்கையும் இந்தியாவிற்கு இருக்கிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 182

    0

    0