கூண்டில் அடைத்து பட்டினி போட்டு 1000 நாய்கள் கொடூரக்கொலை.. 60 வயது நபரின் மிருகத்தனம் ; அதிர வைக்கும் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 2:18 pm

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை கூண்டி அடைத்து வைத்து, பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது கியாங்கி மாகாணம். அதில் உள்ள யாங்பியாங் நகரைச் சேர்ந்த ஒருவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை எனக் கூறி ஊர் முழுவதும் தேடியுள்ளார்.

அப்போது, தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இருந்த வீடு ஒன்றில் ஏராளமான நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், அந்த நாய்கள் கொடுமைப்படுத்தி வருவதைக் கண்டு வேதனை அடைந்துள்ளார்.

பின்னர், இது தொடர்பாக விலங்குகள் உரிமை குழு ஆர்வலருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட வீட்டில் விலங்குகள் உரிமை குழு உறுப்பினர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அதில், வீட்டின் பின்புறத்தில் கூண்டுகள், சாக்கு பைகள் மற்றும் ரப்பர் பெட்டிகளில் ஆயிரக்கணக்கில் அழுகிய நிலையிலான நாய்களின் உடல்கள் கிடந்து உள்ளன.
சில நாய்கள் உயிருடன் இருந்தாலும், நோய் வாய்ப்பட்டும், உடல் மெலிந்தும் காணப்பட்டன. நாள்பட்ட அந்த அழுகிய உடல்கள் சேர்ந்து ஒரு படிவம் போன்று தரையில் படர்ந்து இருந்து உள்ளது.

அந்த வீட்டில் இருந்த 60 வயது நபரை பிடித்து விசாரித்ததில், கைவிடப்பட்ட நாய்களை, சங்கிலி கொண்டு கட்டி போட்டு, பட்டினி போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளாக இதுபோன்று நாய்களை கொன்று குவித்து வருவதாகவும், வர்த்தக ரீதியிலான பராமரிப்புக்கான தொகையை கொடுத்து வந்த நிலையிலும், அதனை வாங்கி கொண்டு, நாய்களை அடைத்து, பட்டினி போட்டு கொலை செய்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!